Skip to main content

சட்டசபைக்கு வராத காங்கிரஸ்... பெரும்பான்மையை நிரூபித்த சிவராஜ்சிங் சவுகான்

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

மத்தியப்பிரதேசத்தில் பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் பெரும்பான்மையை நிரூபித்து நான்காவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

bjp wins motion test in madhyapradesh assembly

 

 

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி  காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், கமல்நாத் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து இன்று அம்மாநிலச் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. வாக்கெடுப்பில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாத சூழலில் சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ கட்சி மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து பெரும்பான்மையுடன் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. இதன்மூலம் பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் பெரும்பான்மையை நிரூபித்து  நான்காவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்