பாஜகவுக்கு வாக்களித்த விரலை வெட்டிக் கொள்வதாக நபர் ஒருவர் விரலை வெட்டி, மாநில உள்துறை அமைச்சருக்கு பார்சல் அனுப்பிய சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் மும்பையில் வசித்து வரும் தனஞ்செய் என்பவர் அவருடைய விரலை வெட்டுவதை வீடியோ எடுத்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் தனஞ்செய்யின் சகோதரர் நந்தகுமார் என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மனைவியுடன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நந்தகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் தன்னுடைய தற்கொலைக்கு சங்ராம், ரஞ்சித் சிங், நாயக், நிம்பல்கர், தியானேஷ்வரர் தேஷ்முக் உள்ளிட்ட சில நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த தற்கொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தகுமாரின் சகோதரர் தனஞ்செய் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தனஞ்செய் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் 'பாஜகவுக்கு வாக்களித்த எனது விரல்களை வெட்டிக் கொள்ளப் போகிறேன்' என சொல்லிவிட்டு வெட்டி, அதை உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.