Skip to main content

பாஜக எம்பியை செருப்பால் அடித்த பாஜக எம்எல்ஏ!!... வைரலாகும் வீடியோ

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

ATTACK

 

உத்திரபிரதேசத்தில் பாஜக எம்பியை பாஜக எம்எல்ஏ ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டுப் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்பி சரத் திர்பாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங், எம்பி  சரத் திர்பாதியை செருப்பால் தாக்கினார். அதனை அடுத்து பாஜக எம்பியும் பாஜக எம்எல்ஏ ராகேஷ்சிங்கை செருப்பால் திரும்ப தாக்கினார். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Former BJP MLA disappearance CM MK Stalin obituary

தென்னிந்தியாவின் மற்றும் தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்எல்ஏவும், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சி.வேலாயுதம் நேற்று (08.05.2024) காலமானார். இந்நிலையில் வேலாயுதம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர். கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. 

Former BJP MLA disappearance CM MK Stalin obituary

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வேலாயுதம் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

துப்பாக்கிச்சூடு சம்பவம்; பாஜக எம்எல்ஏ கைது!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
maharashtra ulhasnagar police station bjp mla issue

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கன்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர்  பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.