பர

மகாராஷ்ட்ரா மாநில மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவை கூடியதும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாகக் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில், சபாநாயகரை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டதாக அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் உத்தரவிட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று மகாராஷ்ட்ரா மாநில எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்தனர்.