Published on 03/09/2022 | Edited on 03/09/2022

மனு கொடுக்க வந்த பெண்ணை பாஜக எம்எல்ஏ ஒருவர் மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாஜக எம்எல்ஏவை பார்க்க வந்த பெண் மனு கொடுக்க முயன்ற நிலையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ அவரை தாக்க முயன்றார்.
பெங்களூருவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பவாலி ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனுகொடுக்க முயன்ற நிலையில், உன்னை அடித்து விடுவேன் என்று மிரட்டிய பாஜக எம்எல்ஏ அவரை தாக்க முற்பட்டார். இதனை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பெண்ணை இரவு 10 மணி வரை காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.