Skip to main content

 “மகாத்மா காந்தி என்று பெயர் வைத்துவிட்டால் மகாத்மா ஆகிவிட முடியுமா?” - இந்தியா கூட்டணி குறித்து பா.ஜ.க முதல்வர்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 BJP Chief Minister says will become a Mahatma if take name of Mahatma Gandhi?

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். 

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஹிமந்த பிஸ்வா, “நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும், அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்திருந்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

 

இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிமந்த பிஸ்வா, “ காங்கிரஸ் புதிய கூட்டணியை அமைத்து அதற்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளது.

 

இந்தியா என்று பெயர் வைத்துவிட்டதால் நாங்கள் தான்  தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று  எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். நான் இப்போது மகாத்மா காந்தி என்று பெயர் வைத்துவிட்டேன் என்றால், நான் மகாத்மா காந்தி ஆகிவிடுவேனா?. இந்த கூட்டணி உருவான பிறகு இந்தியா முழுவதும் சனாதன தர்மத்திற்கு எதிரான சூழல் உருவாகியுள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசியது, தி.மு.க. வின் பேச்சு சுதந்திரம் என்று காங்கிரஸ் கூறுகிறது. நான் ராகுல் காந்தியிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் திமுகவில் இல்லையென்றால் அவர்களை கூட்டணியில் இருந்து அகற்றுங்கள்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தலைவர்கள் மறுப்பு; இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைப்பு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Leaders refuse; Adjournment of the consultative meeting of the India Alliance

 

அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதற்கிடையே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போடப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதே போல், மிசோரம் மாநிலத்தில் ஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 

 

இந்த நிலையில், 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06-12-23) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

 

அதே போல், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறுகையில், “எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை. அவரது வழிகாட்டுதலின்படி, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால்யாதவ் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்” என்று தெரிவித்தார். 

 

இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். மேலும், சில தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், டிசம்பர் 3வது வாரத்தில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்