Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரியாணி கொடுக்கும் சீக்கியர்கள்... வைரலாகும் புகைப்படம்!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

தலைநகர் தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தில்லி போலிசார் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை கண்டித்து கல்லூரி மாணவர்கள் தில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவினாலும் அது எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.
 

klஇந்த இக்கட்டான நிலையில்,  டெல்லியில் வாழும் சீக்கியர்கள் சிலர்,  போராட்டம் செய்யும் மாணவர்களுக்கு பிரியாணி ,டீ, காபி ஆகியவற்றை இலவசமாக கொடுத்து அவர்களின்பசியினை போக்குகிறார்கள்.  இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த உணவு கொடுப்பவரையும் இணையவாசிகள் பாராட்ட தவறவில்லை.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உணவில் பிளேடு; விமான பயணிக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
blade in food to distributed by the air passenger;

கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார். 

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது.