Published on 12/01/2021 | Edited on 12/01/2021
இந்தியாவில் இதுவரை கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது. கேரளாவில் பறவைக் காய்ச்சல், மாநிலப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பறவைக் காய்ச்சல், தங்கள் மாநிலங்களுக்கும் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் உத்தரகண்ட் மாநிலத்திலும் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட மாநிலங்கள் 10 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பறவைக் காய்ச்சலால், உத்தரப்பிரதேச மாநிலம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து உயிருள்ள பறவைகளை இறக்குமதி செய்ய அம்மாநிலம் தடை விதித்துள்ளது.