டுகாட்டி இந்தியா (Ducati india) தனது புதிய ஸ்க்ராம்ப்ளெர் 1100 (Scrambler 1100) மாடலை ஆகஸ்ட் 27 அன்று அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது ஸ்டாண்டர்ட் ஸ்க்ராம்ப்ளேர் 1100, ஸ்க்ராம்ப்ளேர் 1100 ஸ்பெஷல் மற்றும் ஸ்க்ராம்ப்ளேர் 1100 ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

ducati

ஸ்டாண்டர்ட் ஸ்க்ராம்ப்ளேர் 1100 மாடல், ரூபாய் பதினோரு லட்சமும் மற்ற இரண்டு மாடல்களும் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டாண்டர்ட் ஸ்க்ராம்ப்ளேர் 1100 மாடல் வாகனம் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்திலும், ஸ்க்ராம்ப்ளேர் 1100 ஸ்பஷெல் கஸ்டம் க்ரே (custom grey) என்னும் சாம்பல் நிறத்திலும் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.