Published on 16/08/2022 | Edited on 16/08/2022

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் திருவரங்காடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று, பின்புறம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்றது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.