பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் நிதிஷ்குமார்.
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ராஜ் பவனுக்கு சென்ற நிதிஷ்குமார், பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ்குமார், பீகார் மாநில முதல்வராக நாளை (16/11/2020) மதியம் பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.