Skip to main content

வெளியே அனுப்பிய வங்கி அலுவலர்... குருவிக் கூட்டை முகக் கவசமாக்கிய முதியவர்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

The bank officer who sent it out ... the old man with the sparrow's nest mask!

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

 

பொது இடங்களில் முகக் கவசம் அணியவேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் வங்கிக்கு ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற விவசாயியான முதியவர் ஒருவரிடம் வங்கி அலுவலர் எங்கே முகக் கவசம் என வினவியுள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாத அந்த முதியவர் வீட்டுக்குச் சென்று குருவிக் கூட்டை கயிறு கட்டி முகக் கவசமாக அணிந்து மீண்டும் வங்கிக்கு வந்தார். இந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
A case has been filed against Union Home Minister Amit Shah!

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம், பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர். புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், தெலுங்கானா மாநிலத்தில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்; தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Covaccine after Covid Shield; Description given by the manufacturer


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.

இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.

தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவிஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆல்டிராஜெனேகா நிறுவனத்தோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம்தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ எனத் தெரிவித்தது. இது தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க அறிவுறுத்தல்களை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Covaccine after Covid Shield; Description given by the manufacturer

இந்நிலையில் மற்றொரு கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்ற கேள்வி மற்றும் சந்தேகங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் என்பதை மனதில் வைத்து கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படும். கோவாக்சின் லைசன்ஸ் நடைமுறையின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது என அதனைத் தயாரித்த பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த வித பக்க விளைவுகளும் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது என்பது உறுதி எனவும் பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.