Bangladesh MP is a missing in India

வங்காள தேச நாட்டில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் எம்.பியாக பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம்.

Advertisment

இந்த நிலையில், அன்வருல் அசிம் கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து, அடுத்த நாள் வெளியே சென்ற அன்வருல் அசிமி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அசிமின் நண்பர், அவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அழைத்துள்ளார். ஆனால், எந்தவித பதிலும் வராததால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

13ஆம் தேதி காணாமல் போன வங்காள தேச எம்.பி 8 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. மேலும், அவர் கொலை செய்யப்பட்டு கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அவரது உடலை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எம்.பி அசிமின் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரை கண்டிபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.