The ball hit by the batsman; The bees that chased and stung

கர்நாடகாவில் கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர்கள் சிலர் தேன் கூட்டைக்கலைத்த நிலையில் கூட்டிலிருந்து கிளம்பிய தேனீக்கள் கொட்டியதால் இளைஞர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடும் வீடியோஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கர்நாடகாமாநிலம் மங்களூர் காவல் நிலையத்திற்கு அருகே ஓமத்துகிரே என்ற பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்ததனியார் நிலத்தில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஒன்றாகக் கூடி கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேட்ஸ்மேன் அடித்த பந்து, மரத்திலிருந்ததேன் கூட்டில் பட்டதாகத்தெரிகிறது. இதனால் தேன் கூட்டிலிருந்து கிளம்பிய குளவிகள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களைத்துரத்தித்துரத்திக்கொட்டியது. இதனால் அந்த இளைஞர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இளைஞர்கள்பதறி அடித்து ஓடும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment