Published on 25/01/2022 | Edited on 25/01/2022
![Award for Pipin Rawat and Sundar Pichai ... Central Government Padma Awards Announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ShnBXoK0j3SRcbY8DwVpCu4PmYre6XDS0wMyid79xfc/1643123965/sites/default/files/inline-images/0008_2_0.jpg)
நாளை (ஜன.26) இந்திய குடியரசு தினம் கடைப்பிடிக்கப்பட இருக்கும் நிலையில் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், இசைக்கலைஞர் ஏகேசி நடராஜன், முத்துகண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.