Published on 20/04/2023 | Edited on 20/04/2023
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் குண்டு வீசி தாக்கப்பட்டதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டு 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால், குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலால் தான் ராணுவ வாகனம் எரிந்துள்ளது என தெரிவித்துள்ள இந்திய ராணுவம் இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.