அசாம் மாநிலம், சிவசாகர் அருகே லக்வாவில் இன்று (21/04/2021) அதிகாலையில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 3 பேர், ஜூனியர் இன்ஜினீயர் அசிஸ்டெண்ட்ஸ் (புரொடக்சன்), ஜூனியர் டெக்னீசியன் (புரொடெக்சன்) உள்ளிட்ட ஆறு ஊழியர்களை ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஓஎன்ஜிசி வாகனத்திலேயே கடத்திச் சென்றுள்ளனர்.
அந்த வாகனம் அசாம்- நாகாலாந்து எல்லைக்கு அருகிலுள்ள நிமோனகர் காடுகளுக்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக, உள்ளூர் காவல்துறைக்கு ஓஎன்ஜிசி தகவல் கொடுத்துள்ளது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஎன்ஜிசி ஊழியர்களைக் கடத்தியது யார்? அவர்களது நிலை என்ன? என்பது குறித்துகாவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஓஎன்ஜிசி. இந்த நிறுவனம் மத்திய அரசின் திட்டப் பணிகளைச் செயல்படுத்தி அதிக லாபங்களை ஈட்டி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ongc4433.jpg)