வெளிநாட்டினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கூர்க்கா சமூகத்தினர் அது தொடர்பான அரசு நடுவர் மன்றங்களில் ஆஜராக வேண்டாம் என்று அந்த சமூகத்தினருக்கான அமைப்பு கூறியுள்ளது.
அசாம் மாநிலத்தில் வெளிநாட்டினரை வெளியேற்றும் பாஜகவின் திட்டத்தில் 19 லட்சம் பேர்வரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் நீண்டகாலம் குடியேறி, பேரன் பேத்திகளுடன் வாழும் குடும்பங்களையெல்லாம் இந்த பட்டியலில் சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அசாமில் 25 லட்சம் கூர்க்காக்கள் வாழ்வதாகவும், அவர்களில் 1 லட்சம் பேர்வரை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூர்க்காக்களின் பாரதிய கூர்க்கா பரிசங்கா என்ற அமைப்பு கூறியிருக்கிறது. இந்த அமைப்பு சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இந்த பிரச்சனையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களை யாரும் தள்ளிவைக்க முடியாது. அஸாம் உடன்பாட்டின்படி, எல்லை உறுதிசெய்யப்படவில்லை. இந்த கணக்கெடுப்பு குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளோம். இதற்கு எல்லை போலீஸார்தான் காரணம் என்று சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.