Skip to main content

“கோயில் நிலங்களை அபகரித்த பா.ஜ.கவினரை கைது செய்!” - நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

"Arrest the BJP members who grabbed the temple lands!" NTK

 

‘போலி ஆவணங்களின் மூலம் கோவில் நிலங்களை அபகரித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியினைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி புதுச்சேரி அவ்வை திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் முத்.அம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி தலைவர் திவாகர், செயலாளர் செகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். 

 

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அனைத்துத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ‘காமாட்சி அம்மன் கோவில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். கோவில் நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் கோவில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு விற்பனை செய்த அதிகாரிகள் மற்றும் துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய செய்ய வேண்டும். புதுச்சேரியில் அனைத்து கோவில் நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்தவர்களிடமிருந்து அந்த சொத்துக்களை மீட்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழக மக்கள் மோடியை வஞ்சிக்க தயார்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
MODI

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  ‘நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை'' என பேசியிருந்தார்.

'Tamil people are ready to deceive Modi'- Minister Shekharbabu interview

இந்தநிலையில் சென்னையில் நடந்த 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நரேந்திர மோடி அவருடைய கட்சி நோட்டாவிற்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு வரையில் இது ஆறாவது முறையாக தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வந்து கொண்டிருக்கின்றார். யாருக்கு வயிற்றில் புளியை கரைத்து கட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறாரோ? அவருக்கு தான் திமுகவும்,  திராவிட மாடல் ஆட்சியும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுடைய கருத்து. நம்மிடம் இருந்து பெறப்படுகின்ற வரியில் இருந்து அவர்கள் திரும்பி கொடுக்கும் சதவிகிதத்தை பார்த்தால் நாம் அளிக்கிறது 100 என்றால், 25 சதவீதம் அளவிற்குதான் அவர்கள் திரும்பி நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி அவர்களை பார்த்து கேட்பது என்னவென்றால் இத்தனை முறை வருகின்ற பிரதமர் வெள்ளத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர் தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாப நோக்கத்திற்காகத்தானே?  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்காமல் வஞ்சிக்கின்ற பிரதமரை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.

Next Story

“மோடி முனிசிபாலிட்டி தேர்தலுக்கு வருவதுபோல் தமிழகத்திற்கு வந்து செல்கிறார்” - ஆர்.எஸ்.பாரதி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Modi comes and goes to TN like he comes for municipal elections says RS Bharathi

ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக அளவில் போதை பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார். திமுகவின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்தில் அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்திய அளவில் பாராட்டுகின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியின் போது தான் குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை கண்டித்தெல்லாம் அவர் போராட்டம் நடத்தவில்லை. போதைப் பொருளை இந்தியா முழுவதும் சப்ளை செய்வது பாஜகவினர்தான். அதிமுக ஆட்சியில் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டவர்கள் மீது குட்கா வழக்கு சி.பி.ஐ விசாரணையில் உள்ளது.

இவர்கள் மீது அப்போது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒருவர் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் எந்த குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இப்போது போதை பொருள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக அளவில் போதை பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து தான் உலகம் முழுவதும் ஐடி துறையில் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தமிழகத்தில் கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இது 2019ல் கூடிய கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மோடி முனிசிபாலிட்டி எலக்சனுக்கு வருவது போல் வந்து செல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர் ஒரு அரசியல்வாதி. என்.எல்.சி அணு உலை குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு திமுக நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார். இவருடன் திமுக நகர செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மருத்துவர் அணி செயலாளர் கலைகோவன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, தொமுச நிர்வாகி தங்க ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.