Published on 23/12/2021 | Edited on 23/12/2021
பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நெருங்குவதையடுத்து தேசவிரோத சக்திகள், இதுபோன்ற செயல்களை செய்வதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சில தேசவிரோத சக்திகள் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.