Announcement that PRS party will form government again in Telangana

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில் நேற்று தெலங்கானாமாநில தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலுக்கு கருத்துக்கணிப்புகள் நேற்று மாலையில் இருந்து வெளி வர தொடங்கியுள்ளது.

கருத்துக்கணிப்பில் தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. மிசோரமில் எதிர்க்கட்சியாக இருக்கும் இசட்.பி.எம் எனும் மாநில கட்சி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Announcement that PRS party will form government again in Telangana

Advertisment

தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது பி.ஆர்.எஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அக்கட்சியின் அதிகார சமூக வலைத்தளப்பக்கத்தில், “முதல்வர் கே.சி.ஆர். தலைமையில் டிசம்பர் 4ம் தேதி மதியம் 2:00 மணிக்கு தெலங்கானா தலைமை செயலகத்தில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தெலங்கானாவில் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.