Skip to main content

தங்கை மீது பாசம் காட்டிய பெற்றோர்... கோபத்தில் ஐந்து வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

andhra child incident

 

 

தனது பெற்றோர் புதிதாகப் பிறந்த தனது தங்கை மீது பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த ஐந்து வயது சிறுமி, தனது தங்கையை நீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில், 11 மாதங்களுக்கு முன்னர் மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூவரும் தங்களது வீட்டில் வசித்துவந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. இதனால் அச்சமடைந்த தாய் காவியா அக்கம்பக்கத்தில் தனது குழந்தையைத் தேடியுள்ளார். எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காததை தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பின்னர், வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் எனவே தங்கையைத் தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும், அக்கா நிர்மலா அப்பாவியாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயும், போலீஸாரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். பின்னர், குழந்தை நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் முடிவில் போலீஸார் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அன்றும் - இன்றும்; அரசியல் சம்பவத்தை நினைவு கூர்ந்த பிரபலம்!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
bose venkat chandra babu naidu election 2024

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க. கூட்டணி கட்சியுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. 

இதனிடையே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்று அதன் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் பாஜக தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சந்திரபாபு நாயுடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட், அவரது எக்ஸ் பக்கத்தில், “இன்று கற்றுக்கொண்ட அரசியல் பாடம். எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாபுநாயுடு. அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம். கடைசி வரை பிரதமரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. 

ஏமாற்றுத்துடன் திரும்பினார் !அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள், புறக்கணிப்புகள்! கடைசி நேரத்தில் கூட சிறை. இன்று முதல்வர்! ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர். தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்த பிரதமர் சந்திக்காமல் புறக்கணித்தாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார். கர்நாடக முதல்வர் பேசுகிறார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல! எல்லோருக்குமானது! அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்” என்ற பதிவை பகிர்ந்துள்ளார். 

Next Story

 மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
balakrishna won victory in andhra assembly election

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6.30 நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.கவோடு தெலுங்கு தேசம், ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் களம் கண்டனர். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், தெலுங்கு தேசம் 142 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. 

இதில் நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எக்ஸ் வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,07,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்துப்பூர் தொகுதியில் ஏற்கெனவே 2014 மற்றும் 2019 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.