Skip to main content

தீம் பார்க் செல்வோர் கவனத்திற்கு...

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

park

 

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் 5- ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, "நாடு முழுவதும் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் திறக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூடங்களில் 50% பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்ட, 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ஒரு கோடி இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி’ - பட்ஜெட்டில் அறிவிப்பு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Vocational training for one crore youth' - announcement in the budget

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில், “பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும். பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ், 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் வழங்கப்படும். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் கோடி மத்திய  அரசின் உதவியும் அடங்கும். பிரதம மந்திரி சூர்யாகர் முஃப்ட் பிஜிலி யோஜனா மூலம் 1 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு வீட்டின் மேற்கூரை கூரையின் மேல் சோலார் பேனல்களை நிறுவ தொடங்கப்பட்டுள்ளது. 

Vocational training for one crore youth' - announcement in the budget

சிறிய அணு உலைகளை அமைப்பதற்கும், சிறிய உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், அணுசக்திக்கான புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் தனியார் துறையுடன் அரசு கூட்டாக சேர்ந்து செயல்படும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆக இருக்கும்.

திவால் சட்டம் மற்றும் திவால் கோர்ட்டுகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் அமைக்கப்படும். கடன் வசூல் தீர்ப்பாயங்கள் வலுப்படுத்தப்படும். மேலும் கடன்களை விரைவாக வசூலிக்க கூடுதல் தீர்ப்பாயங்கள் நிறுவப்படும். 25 ஆயிரம் கிராமப்புற வாழ்விடங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்த பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா 4 ஆம் கட்டம் தொடங்கப்படும்.

Vocational training for one crore youth' - announcement in the budget

பீகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே இம்மாநிலத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம், வெள்ள மேலாண்மை மற்றும் அது தொடர்பான திட்டங்களுக்கு உதவி வழங்கப்படும். இமாச்சலப் பிரதேசம், வெள்ளத்தால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பலதரப்பு உதவிகள் மூலம் மறுகட்டமைப்புக்கான ஆதரவு வழங்கப்படும். மேலும், நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்புகளால் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.

இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழில் பயிற்சிக்கான திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் படி மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் இன்டர்ன்ஷிப் கொடுக்கப்படும் வகையிலும் ,  மத்திய அரசு ஒருமுறை ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய பட்ஜெட் - 2024; திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
CM MK Stalin listed the projects for Union Budget 2024

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜுன் மாதம் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை உறுப்பினர்கள்  பலரும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

CM MK Stalin listed the projects for Union Budget 2024

இத்தகைய சூழலில் தான் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்திருந்தார். முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி (01.02.2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (23.07.2024) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

CM MK Stalin listed the projects for Union Budget 2024

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் தர வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்பது நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு ஆகும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.