Published on 18/05/2020 | Edited on 18/05/2020

உம்பன் புயல் நாளை மறுநாள் மாலை மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக தமிழகத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உம்பன் புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.