Skip to main content

“தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டம் கண்டுபிடிக்க வேண்டும்” - அமித்ஷா

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Amit Shah said A new scheme should be devised to replace the electoral bond scheme

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்தத் தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்தப் பத்திரங்களைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்தக் கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் எனத் தீர்ப்பு வழங்கியது. 

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (26-05-24) பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘நன்கொடையாளர்கள் எஸ்.பி.ஐ இல் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் தங்களது பெயரை வெளியிடாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் திட்டம் ஒரு முக்கியமான நேரத்தில் கைவிடப்பட்டது.

இது தேர்தல் மற்றும் அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கை சமர்ப்பிக்கும் போது, ரொக்க நன்கொடை மூலம் எவ்வளவு பணம், காசோலை மூலம் எவ்வளவு என்பது தெரியவரும். தேர்தல் பத்திரம் திட்டத்தின் போது காசோலைகள் மூலம் நன்கொடை எண்ணிக்கை 96 சதவீதத்தை எட்டியிருந்தது. இப்போது நீங்கள் அறிவீர்கள். கருப்புப் பணத்தின் தாக்கம் அதிகரித்தால், அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்” என்று கூறினார்.  

இதனையடுத்து, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதால், நடந்து வரும் தேர்தல்களில் கருப்புப் பணத்தின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “அப்படித்தான் நினைக்கிறேன். பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதிக்க வேண்டும். அவர்களின் தீர்ப்பு வந்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் பார்வையும் மிக முக்கியமானது. அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரலையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே நாம் கூட்டாக ஆலோசித்து புதிய மாற்றத்தை முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘நடந்தது என்ன?’ - தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'What happened?' - Tamilisai Soundarrajan explained

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகையச் சூழலில்தான் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் (12.06.2024) ஆந்திராவில் நடந்தது. அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை ஏதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்து பேசினேன். அப்போது தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் மற்றும் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதம் பற்றி கேட்கதான் அவர் என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். இது தொடர்பாக விரிவாக கூற முற்படுகையில் போதிய நேரமின்மையால் பணிகளை தொடருமாறு அவர் அறிவுறுத்தினார். இது போன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா?; “நிர்மலா சீதாராமனை இதைப் போல் அமித்ஷா நடத்துவாரா” - தயாநிதி மாறன் கண்டனம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
ayanidhi Maran condemns for Amit Shah condemned Tamilization?

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவர். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல; வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாகத் தொகுதிகள் பெற்றிருப்போம்” என்றார்.  இதையடுத்து நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பிய தற்போதைய பாஜக தலைவர் இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் எல்லாம் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என்று விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். 

இதனிடையே, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று (12-06-24) ஆந்திராவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ தற்போது படுவைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

ayanidhi Maran condemns for Amit Shah condemned Tamilization?

தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பதாகக் கூறப்படும் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர். அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா?. தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா?. இது மிகவும் விரும்பத்தகாதது” என்று தெரிவித்துள்ளார்.