/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambanis-std.jpg)
உலக பொருளாதாரம் மற்றும் கோடீஸ்வரர்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வரும் ஹுருன் நிறுவனம் கடந்த ஆண்டிற்கான இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 104 பில்லியனர்கள் உள்ளதாகவும், அதில் முட்கள் இடத்தில முகேஷ் அம்பானி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியாவில் 132 பேர் பில்லியனர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனி நபர்களின் விவரங்களை பார்க்கும்போது, உலக அளவில் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் உள்ள ஒரே ஓரு ஆசியர் முகேஷ் அம்பானி மட்டுமே. இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான அவர் தற்போது 54 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதல் பணக்காரராகவும். உலக அளவில் இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார்.மேலும் இந்த பட்டியலில் முதன் முதலில் இடம்பெற்ற இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)