பிரபல சர்வதேச நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையமான CII 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ப்யூச்சர் ரீடைல் வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக, அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டில் முதலீடு செய்ய அமேசானுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதுபற்றிய தகவல்களை அந்நிறுவனம் தெரிவிக்காமல், மறைத்ததாக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ப்யூச்சர் ரீடைல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் செய்த முதலீடு ரத்து செய்யப்படுவதாகக் கூறி, 202 கோடி ரூபாய் அபராதத்தைப் போட்டி ஒழுங்கு முறை ஆணையம் விதித்துள்ளது.