Skip to main content

“நாட்டின் பெயர்களில் உருவாகும் கூட்டணிகளைத் தடை செய்ய வேண்டும்” - மாயாவதி

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Alliances formed in the name of the country should be banned

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் உலகத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருந்தளிக்க உள்ளார்.

 

இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில் அவர், “பாரதம் மற்றும் இந்தியா பெயர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இது குறித்து பரிசீலிக்க வேண்டும். நாட்டின் பெயரில் உருவாகும் அனைத்து அமைப்புகள், கட்சிகள் மற்றும் கூட்டணிகளைத் தடை செய்ய வேண்டும். எங்கள் கட்சி எந்தவித சாதிய, வகுப்புவாத மற்றும் முதலாளித்துவ கூட்டணிகளில் இருந்து விலகி இருப்பது முற்றிலும் சரியானது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை தடுப்பை எகிறிக் குதித்த ராகுல்; முதல்வருக்குக் காத்திருந்த சர்ப்ரைஸ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rahul jumped over the road block; The resilience that awaited the Chief Minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரை கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கோவையில் நடந்த இந்தியா கூட்டணி பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டார். திமுக சார்பில் தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று கோவை சென்ற ராகுல் காந்தி திடீரென சிங்காநல்லூர் பகுதியில் காரை நிறுத்தச் சொன்னார். உடனே காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி குதித்து, மறுபக்கம் உள்ள  பேக்கரி கடைக்குள் நுழைந்தார். அங்கு சென்றவர் உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களிடம் ஸ்வீட் ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஸ்வீட் யாருக்கு என்ற கேள்வி எழுப்ப? என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்கு எனப் பதில் அளித்துள்ளார் ராகுல் காந்தி.

பின்னர் கடையின் ஊழியர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களிடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதேபோல் இனிப்பு வகைகளையும் ருசி பார்த்தார். அதன் பிறகு அங்கிருந்து பயணப்பட ராகுல் காந்தி கடையில் வாங்கிய இனிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அன்பாக கொடுத்தார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என தனக்கு ராகுல் காந்தி இனிப்பு கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Next Story

“இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
India alliance will give Rahul a sweet victory CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர். அப்போது அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்கிறார். யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார் என்று கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் கேட்கிறார். அவரிடம் என் சகோதரர் ஸ்டாலினுக்காக என ராகுல் காந்தி பதிலளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ராகுல் காந்தி, விடை பெற்றார். அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கொடுத்தார். அதனை முதல்வர் மு.க ஸ்டாலினும் மிகவும் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு கணம் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிப்பை சேர்க்கிறேன். என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக கொஞ்சம் மைசூர் பாக் வாங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

India alliance will give Rahul a sweet victory CM MK Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்’ என குறிப்பிட்டு, “என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தரும்” எனத் தெரிவித்துள்ளார்.