Skip to main content

காங்கிரஸின் கருப்புப் பணம் தொலைந்துவிட்டது என்று போராடுகிறார்கள்- சமித் பத்ரா

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
sambit patra


இரண்டாம் ஆண்டு பணமதிப்பு நீக்க நாளை பாஜக பல இடங்களில் கொண்டாடி வந்தது, ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதை எதிர்த்து கடுமையாக விமர்சித்தும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, காந்தியும் நேரு குடும்பத்தின் நான்கு தலைமுறை சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் தொலைந்துள்ளதால் அதிருப்தியில் உள்ளனர்.
 

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மோடிக்கும், அதை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸுக்கும் இடையே இந்திய அரசியலில் பெரிய போர் நடந்து வருகிறது. ராகுல் காந்தி பேசுவது முழுவதும் பொய், பேசிய ஒரு விஷயத்தையே பேசி வருகிறார். காந்தி குடும்பம் விட்டு சென்ற பிறகு, மோடி ஆட்சியின் கீழ் இந்தியா முன்னேறி வருகிறது என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்