Published on 04/11/2021 | Edited on 05/11/2021

இயக்குனர் பிரியதர்சன இயக்கத்தில் கேரள நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரலாற்று திரைப்படம் மரக்காயர்: அரபிக்கடலின் சிம்ஹம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தயாரிக்க, இசையமைப்பாளர் ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். டெல்லியில் விஞ்ஞான் பவனில் கடந்த 25.10.2021 அன்று நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதைக் கேரள நடிகர் மோகன்லாலின் ' மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம் ' படம் பெற்றது.

இந்தநிலையில் இந்த படத்திற்காகப் பிரம்மாண்டமாகப் போடப்பட்டிருந்த செட்டுக்கு நடிகர் அஜித்குமார் சர்ப்ரைசாக சென்று திரைப்பட குழுவினருடன் பேசி மகிழ்ந்த வீடியோவை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.