Air India Apologizes for 'Blade Piece in Fig Chat'

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு கிடந்தது தொடர்பாக பத்திரிகையாளர்ஒருவர்சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்ட சம்பவமும், அதற்காக விமான சேவை நிறுவனம் கொடுத்தஇழப்பீட்டை வாங்க மறுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Advertisment

பெங்களூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கடந்த ஒன்பதாம் தேதி மதுரஸ் பால் என்ற பத்திரிகையாளர் பயணித்துள்ளார். பயணத்தின் போது ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் அத்தி சாட் உள்ளிட்ட பல உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் அத்தி சாட் உணவில் பிளேடு ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பத்திரிகையாளர் மதுரஸ் பால் மென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென வாயில் ஒரு தடிமனான பொருள் சிக்கியது. அதனை எடுத்து பார்த்த பொழுது பிளேடு துண்டு எனத்தெரியவந்ததைக்கண்டு அதிர்ந்துபோனார்.

Advertisment

இதை ஒருவேளை சிறுவர்கள் அல்லது முதியவர்கள் சாப்பிட்டிருந்தால் என்னவாகி இருக்கும் எனக் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளபக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை மதுரஸ் பால்ஏர் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தை டேக் செய்து வெளியிட்டு இருந்தார். காய்கறிகளை வெட்டிய போதுபிளேடு உடைந்து உணவில் கலந்துள்ளது தெரியவந்தது. இதைத்தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்திய நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மதுரஸ் பாலிடம் மன்னிப்பு கோரியதோடு, இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் அதனை தான் வாங்க மறுத்ததாக சமூக வலைத்தளத்தில் மதரஸ் பால் தெரிவித்துள்ளார்.

Advertisment