Skip to main content

கொச்சியில் விமான விபத்து

Published on 27/05/2018 | Edited on 27/05/2018
air

 

கொச்சியில் இருந்து புறப்பட்ட இலங்கை விமானம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி விளக்கில் மோதி சேதம் அடைந்தது.  உடனடியாக விமானத்தை விமானி நிறுத்தியதால் 227 பயணிகள் காயமின்றி தப்பினர்.  

இதன் பின்னர், சக்கரம் சேதம் அடைந்ததை அடுத்து இலங்கை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது.  மேலும், சேதம் சரி செய்யப்படும் வரை கொச்சி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.   

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளிச் சுவர் இடிந்து விபத்து; அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
School wall collapse accident in gujarat

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து, வகுப்பறையில் இருந்து வெளியேறினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வதோதரா தீயணைப்பு துறையினர், சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு மாணவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

ரயில் தடம் புரண்டு விபத்து; மீண்டும் பரபரப்பு

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Train derailment accident; The excitement again

உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - திப்ரூகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் நான்கு ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மீண்டும் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.