Published on 02/10/2021 | Edited on 02/10/2021

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்து மத வழக்கத்தின் படியும் கிறிஸ்தவ மத வழக்கத்தின் படியும் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற தகவல் வெகுநாட்களாகவே உலா வந்தவண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். அதேபோல் சமந்தாவைப் பிரிவதாக நடிகர் நாக சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.