
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்தவர் துனிஷா ஷர்மா. 20 வயதான இவர் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்துள்ளார். வித்யா பாலன், கத்ரீனா கைஃப் ஆகியோருடனும் நடித்துள்ளார். இந்நிலையில் வெப் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கதாநாயகனாக நடித்து வரும் செஷன் முகமதுகான் என்பவர் மேக்கப் அறைக்கு துனிஷா சென்றதாகக் கூறப்படுகிறது.
உள்ளே சென்று நீண்ட நேரத்திற்கு பிறகும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு நடிகை துனிஷா ஷர்மா தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடிகையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தற்கொலையா அல்லது குறிப்பிட்ட நடிகருக்கும் இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.