n

பாலிவுட் நடிகர் ஷாருக்கான்உடல்நிலைபாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இது உண்மையா வதந்தியா என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் தற்போது காவல்துறை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது. அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisment

நடிகர் ஷாருகான் நலமடைந்து மீண்டு வர வேண்டுமென அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.