Skip to main content

அகிலேஷ் யாதவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

Actor Rajinikanth meets Akhilesh Yadav

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

 

இதையடுத்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில், அங்குள்ள ராஜ்பவனுக்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிசுப்பொருட்களை யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்.

 

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தித்தேன். அப்போதிலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். அதிலிருந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வருகிறோம். 5 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை, இப்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாளில் அப்டேட் - ‘ரஜினி 170’ படக்குழு அறிவிப்பு

rajini 170 title update

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் பிறந்தநாள் நாளை வரும் நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைப்புடன் சேர்த்து படக்குழு சார்பில் ரஜினியின் பிறந்தநாள் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

அரசியல் வாரிசு குறித்து அறிவித்த மாயாவதி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mayawati announces political succession

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று (10.12.2023) லக்னோவில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாயாவதி தனது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.

மாயவதியின் சசோதரர் ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் (வயது 28) ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர் ஆவார். மாயாவதியின் அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டாலும், தற்போதைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதியே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் ஆகாஷ் ஆனந்த் மாயாவதிக்கு பின்னர் அக்கட்சியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியதும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானாவிலும் பகுஜன் சமாஜ் கட்சி பணிகளுக்கு பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.