தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்டின், சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, அமலாக்கத்துறையின் (Enforcement Directorate) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியன் வங்கியிடம் கடன் வாங்கி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக, பண மோசடி தடுப்புச் சட்டம் 2002- ன் (Provisions of Prevention of Money Laundering Act, 2002) கீழ், 234.75 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கியது. அதேபோல், தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்டினின் ரூபாய் 173 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை முடக்கியது. மேலும், மார்டின் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிலம் மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.