Skip to main content

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி - அனுக்ரீத்தி வாஸ் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் அனுக்ரீத்தி வாஸ். தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் இவர் நடித்தார். அவரது பிரத்யேக புகைப்படங்கள். 

படங்கள் : நவீன் & முகமது

Next Story

இளம்பெண்ணைக் கொலை செய்து எரித்த கொடூர குடும்பம்; விசாரணையில் திடுக் தகவல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A family who incident a teenage girl for love marriage

ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிம்லா குஷ்வாஹா (20) எனும் இளம்பெண். இவர் ரவீந்திர பில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷிம்லாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் விருப்பத்தை மீறி ஷிம்லா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பில்லை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி, மத்தியப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில். தம்பதி இருவரும் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை, கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றுள்ளனர். இதில் பதற்றமடைந்த கணவர் ரவீந்தர பில், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரி்ல், போலீசார் விசாரணை நடத்தியதில், ஷ்மிலாவை அவரது குடும்பத்தினரே கொலை செய்து சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருக்கும் ஷிம்லாவின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்றோர் விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.