Published on 01/07/2022 | Edited on 01/07/2022

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பல இடங்களில் பாஜக ஆட்சியை பிடித்திருந்தாலும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது அக்கட்சியினரைக் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்து பகவந்த் மான் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஆம் ஆத்மி அமைச்சரவை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பஞ்சாபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு இன்று துவங்கி வைத்துள்ளது. இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆம் ஆத்மி கொடுத்த அதனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.