கேம்லின் நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
80, 90 கிட்ஸ் பள்ளி மாணவர்கள் முதல் தற்போதைய 2கே பள்ளி மாணவர்கள் வரை பள்ளி கால அடையாளமாக திகழ்ந்து வருவது 'கேம்லின்' ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுதுபொருட்கள். பள்ளி வாழ்வில் முக்கியமான ஒன்றாக கேம்லின் ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுது பொருட்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ், ஓவியம் வரைவதற்கான பொருட்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் தண்டேகர் மும்பையில் வசித்து வந்தார். 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கேம்லின் நிறுவனம் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.
86 வயதான சுபாஷ் தண்டேகர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைப் பலனின்றி சுபாஷ் தண்டேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்நாயக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.