Skip to main content

9 வந்தே பாரத் ரயில் சேவைகள் நாளை தொடக்கம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 9 Vande Bharat train services start tomorrow

 

9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

 

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி திருநெல்வேலி - சென்னை, உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - பூரி, ராஞ்சி - ஹவுரா என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் ரயிலில் திருமணம்; வைரலாகும் வீடியோ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Marriage on a Running Train; A viral video

 

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை; கட்டடத் தொழிலாளி கைது

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

nn

 

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ஈரோட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற போது முன்பதிவு பெட்டியிலிருந்த பெண் பயணியிடம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் கட்டிடத் தொழிலாளி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கட்ட தொழிலாளியான கருணாகரனை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்