Skip to main content

6 நாட்கள் 3 நாடுகள்.. இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

6 days 3 countries.. PM Modi is leaving today

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (19ம் தேதி) முதல் 24ம் தேதி வரை ஆறு நாட்களில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

 

ஜப்பான் நாட்டில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பினராக இல்லாத சில நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜப்பானில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலக அமைதி, நிலைத்தன்மை, நிலையான கிரகத்தின் செழிப்பு, உணவு, உரம் மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றைக் குறித்து உரையாற்ற இருக்கிறார். 

 

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் பிரதமர் மோடி, 22ம் தேதி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இணைந்து இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் 3வது உச்சி மாநாட்டை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து அன்றே (22ம் தேதி) ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு சிட்னி நகரில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பிறகு 23ம் தேதி சிட்னி நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த இருக்கிறார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கரகாட்டம் ஆடி மகிழ்ந்த ஹிரோஷிமா சபாநாயகர்! 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

The Hiroshima Speaker who was happy by karagatam

 

மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவ கால வரலாற்றுச் சிற்பங்களைக் காண்பதற்கு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

 

ஜப்பான் நாட்டின், ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தபோது அங்கு தமிழ்நாட்டில் பாரம்பரிய கலையான கரகாட்டம் நடனம் ஆட்டம் ஆடப்பட்டது. 

 

அப்போது, ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருவரும், கரகாட்ட இசையை ரசித்து கரகாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களும் கரகாட்டம் ஆடினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்