5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர்.
அதிவேக தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று (26/07/2022) தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாளில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர். இது கடந்த 2015- ஆம் ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 37,000 கோடி அதிகமாகும். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்றும் நடைபெறவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.