Skip to main content

இன்று தொடங்குகிறது 5ஜி அலைக்கற்றை ஏலம்! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

5G spectrum auction starts today!

 

நாடெங்கும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன தொலைத்தொடர்பு சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வழங்குவது தொடர்பான, ஏலம் இன்று (26/07/2022) தொடங்குகிறது. இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்- ஐடியா, அதானி ஆகிய  நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. 

 

72 ஜிகா ஹெட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் விற்பனை மூலம் அரசுக்கு 4.30 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், அதிகளவு அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம், 14,000 கோடி ரூபாயை முன்வைப்பு தொகையாக செலுத்தியுள்ளது. 

 

ஏர்டெல் 5,500 கோடி ரூபாயையும், வோடாஃபோன்- ஐடியா 2,200 கோடி ரூபாயையும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாயையும் முன் வைப்பு தொகையாக செலுத்தியுள்ளன. 5ஜி சேவை ஓரிரு மாதங்களில் பெருநகரங்களில் மட்டும் தொடங்கப்படவுள்ளது. இதன் பின் இந்த சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 11 மொழிகளில் ஒருநாள் கிரிக்கெட்;  ஜியோ சினிமா இலவச ஒளிபரப்பு!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 ODI cricket in 11 languages; Jio Cinema Free Streaming

 

உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.

 

முதலாவது சர்வதேசத் தொடரை ஜியோ சினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோ சினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ்  சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18-1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 ஹெச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. டாடா ஐபிஎல் போட்டி - 2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோ சினிமா தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோ சினிமா டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம்18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

 

இதுகுறித்து வயாகாம்18 - ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

 

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைத்தளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைத்தளங்களில் Jio Cinema செயலியைப் பின்தொடரலாம்.

 

போட்டி அட்டவணை


செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

 


 

Next Story

ஏர்டெல் கட்டணம் 57% கிடுகிடு உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published on 21/11/2022 | Edited on 22/11/2022

 

h

 

ஏர்டெல் நிறுவனம், அடிப்படை சேவைக் கட்டணத்தை, 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக,  57% உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த கட்டண  உயர்வை, இந்தியாவிலுள்ள ஹரியானா, ஒடிஷா மாநிலங்களில் தற்போது அமல்ப்படுத்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழும் விமர்சனங்களைப் பொறுத்து, அடுத்தகட்டமாக இந்தியா முழுவதும் கொண்டுவரவுள்ளது. தற்போதுள்ள பொருளாதாரச் சரிவு நிலையில், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது.

 

டிஜிட்டல் இந்தியா உருவாக்கத்தில் ஒன்றிய அரசு காட்டிவரும் அபரிமித ஆர்வத்தால், ஸ்மார்ட் போன் பயன்பாடு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை போன்றவை வெகுவேகமாகப் புழக்கத்துக்கு வருகிறது. 2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ சந்தைக்குள் அதிரடியாக வந்து, அன்லிமிடேட் டேட்டா பயன்பாட்டை வழங்கி, மற்ற செல்பேசி நிறுவனங்களுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாரதப் பிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோவிற்கு விளம்பர மாடல் போல போஸ் கொடுத்தது அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

 

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் ஏர்டெல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.  வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் ஆட்டம் கண்டு, தாக்குப்பிடிப்பதற்காக  இரண்டும் ஒன்றாக இணைந்தன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிதைக்கப்பட்டது. ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் பெருத்த நட்டத்தைச் சந்தித்து, கடனில்  தத்தளித்தன. இதிலிருந்து மீள்வதற்காக அவ்வப்போது, பல்வேறு விதங்களில் கட்டணங்களை உயர்த்திவந்தன. இதற்கிடையே கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் கரோனாவினால் ஏற்பட்ட பொதுமுடக்கம், ஆன்லைன் கல்வியைப் பெருமளவு பரவலாக்கியது. இதன் காரணமாக, அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். எனவே செல்பேசி சேவைக்கான தேவை அதிகரித்தது. இது செல்பேசி  நிறுவனங்களுக்கு ஜாக்பாட் போல அமைந்தது. இந்தியாவில் கடந்த 2021 கணக்கீட்டின்படி, 12 கோடி பேர் செல்பேசிப் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். 

 

இவர்களின் 7.5 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 10 கோடி ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களாக அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக, செல்பேசி நிறுவனங்கள் மீண்டும் சிக்கலைச் சந்திக்கின்றன. எனவே இதைச் சமாளிப்பதற்காக, குறைந்தது 20% அளவிற்கு கட்டண உயர்வு இருக்குமென எதிர்பார்த்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக 57% கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கவுள்ளன. ஸ்மார்ட்போன்களுக்குப்  பழக்கப்பட்டுப்போன மக்கள் இதிலிருந்து தப்புவது கடினமே! 

 

- தெ.சு.கவுதமன்