Published on 30/07/2022 | Edited on 30/07/2022
5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை ஐந்தாவது நாள் முடிவில் 1.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில்,ஐந்தாவது நாளான இன்று (30/07/2022) 30 ஆவது சுற்றின்முடிவில் 1.50 லட்சம் கோடியை ஏலத்தொகை தாண்டியதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் ஏழு சுற்றுகள் நடைபெற்றது. ஐந்தாவது நாள் ஏலத்திலும் முடிவுகள் எட்டப்படாததால், ஆறாவது நாள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.