Skip to main content

55 மணி நேரப் போராட்டம்; ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 55-hour struggle; girl rescued from borehole lost their live

 

மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.

 

மத்தியப்பிரதேசம் மாநிலம் சேகோர் மாவட்டத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது சிறுமி ஷிஷ்ட்ரி அருகிலிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அதைத் தொடர்ந்து தேசிய மீட்பு படையினர், மாநில காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

சிறுமி இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் வாயுவானது தொடர்ந்து செலுத்தப்பட்டது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த சிறுமி நேற்று மாலையில் 50 அடிக்கு மேல் சென்று விட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 55 மணிநேரப் போராட்டங்களுக்கு சிறுமி இன்று மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலகட்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்