வார இறுதி நாட்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் உள்ள கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி நெல்லித் தோப்பு பகுதியைச் சேர்ந்த லேகா மற்றும் மேனகா என்ற இரு சிறுமிகள் உள்ளிட்ட 2 இளைஞர் என 4 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கிய 4 பேரையும் இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் காணாமல் போன 4 பேரையும் ஒதியஞ்சோலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் குளித்த சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானசம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.