Published on 12/07/2021 | Edited on 12/07/2021

அடுத்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அம்மாநில பிரதான கட்சிகள் தற்போது செய்யத் துவங்கியுள்ளன. இதன் ஒருகட்டமாக பொதுமக்களின் மனங்களைக் கவரும் வகையில் முக்கிய சலுகைகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும் என்றும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளது. இது பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக அம்மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.