Skip to main content

2,276 இனக்கலவரங்களில் 300 படுகொலைகள்! - அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

நாடு முழுவதும் இனக்கலவரங்கள் அதிகரித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், நாடு முழுவதும் 2015-17 காலகட்டத்தில் நடந்த இனக்கலவரங்கள், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த அறிக்கையை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

 

Communal

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தக் காலகட்டத்தில் 2,276 இனக்கலவரங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இதில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 822 இனக்கலவரங்களில் 111 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், 2,384 பேர் காயமடைந்துள்ளனர். 

 

2017ஆம் ஆண்டு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 195 இனக்கலவரங்களில், 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் நடந்த 91 இனக்கலவரங்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்தக் காலகட்டத்தில் 2017ஆம் ஆண்டில்தான் அதிகப்படியான இனக்கலவரங்கள் நடந்துள்ளன. இனக்கலவரங்கள் ஏற்படும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம்  மூன்று ஆண்டுகளிலும் முதலிடத்தில் உள்ளது. 

சார்ந்த செய்திகள்