Skip to main content

மாயாவதி உதவியாளரிடம் 225 கோடி சொத்து...வருமான வரி துறை அதிரடி முடிவு...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

உத்திரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற நெட் ராம் ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் லக்னோ நகரங்களில் உள்ள இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

 

mayawati

 

அப்போது சொகுசு கார்கள், தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என 225 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டாத சொத்துக்கள் கண்டறியப்பட்டன. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்தவர் இவர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனக்கு ஒரு சீட் வேண்டும் என கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  

இதனை தொடர்ந்தே வருமான வரி துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக வருமான வரித்துறை தற்போது முடிவெடுத்துள்ளது .

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலியின் கழுத்தை வெட்டி கையில் பிடித்தபடி வீடியோ; பதைபதைக்க வைக்கும் சைக்கோ கொலை

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Video of girlfriend's throat being cut and held in hand; A young man's disturbing psycho act

உத்தரப்பிரதேசத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி சிரித்த முகத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட சைக்கோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலசந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தன். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அந்தன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தன் திடீரென ஆத்திரத்தில் காதலியின் தலையைத் துண்டாக வெட்டியுள்ளார்.

வெட்டிய தலையுடன் சிரித்துக் கொண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நடிகர் சஞ்சய் தத் நடித்த கல்நாயக் என்ற படத்தைப் பார்த்து அதில் வரும் 'பல்லு' என்கிற கேரக்டர் போலவே தானும் கொலை செய்தேன்' எனத் தெரிவித்துள்ளது பதைபதைப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் 'இனி யார் என்னை ஏமாற்றினாலும் இப்படித்தான் கொலை செய்வேன்' எனவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது,

ஒரு சினிமா நடிகரைப் பார்த்து இளைஞர் கொடூரச் செயலில் ஈடுபட்டு நேரடியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச போலீசார் இளைஞர் அந்தனை கைது செய்துள்ளனர்.

Next Story

எட்டு முறை பாஜகவிற்கு ஓட்டு போட்ட சிறுவன்; வெளியான அதிர்ச்சி வீடியோ

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Boy who joined BJP eight times; Shocking video released

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் 18 வயது நிரம்பாத சிறுவன் எட்டு முறை பாஜகவிற்கு ஒரே நேரத்தில் வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பார்காபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது வாக்குச்சாவடிக்குள் நுழைந்த சிறுவன் ஒருவன் பாஜகவிற்கு 8 முறை வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, விவிபாட் இயந்திரத்தில் வாக்கு பதிவான ஒப்புகை சீட்டையும் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தச் சிறுவனின் தந்தை பாஜகவின் உறுப்பினராகவும், அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவராகவும் இருப்பதால் இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.